×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்கிறார் ராகுல் காந்தி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்கிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடந்த வழக்கை நள்ளிரவில் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக நள்ளிரவே விசாரிக்க வேண்டுமென்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனிடையே மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து அவரது வீட்டைச் சுற்றி டெல்லி போலீஸ்144 தடை உத்தரவு பிறப்பித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘தேவையான சட்ட உதவிகளை செய்ய காங்கிரஸ் கட்சி தயார்’ என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்கிறார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Kejriwal ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...